ஆளுமை:பிலிப்பு தெமெல்லோ, சைமன் தெமெல்லோ

From நூலகம்
Name பிலிப்பு தெமெல்லோ
Pages சைமன் தெமெல்லோ
Birth 1723
Pages 1790
Place கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிலிப்பு தெமெல்லோ, சைமன் தெமெல்லோ (1723 - 1790) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சைமன் தெமெல்லோ. இவர் தமிழ், எபிரேயம், கிரேக்கம், இலத்தீனியம், போர்த்துக்கேயம் முதலான மொழிகளில் புலமையுடன் விளங்கினார். இவர் கொழும்பு நார்மல் பாடசாலை ஆசிரியராகவும் வடமாகாண சிரேஷ்ட மதகுருவாக 1753 ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார்.

இவர் சத்தியத்தின் ஜெபம், புதிய ஏற்பாடு, ஒல்லாந்த இறப்பிறமாதுச் சபையின் சரித்திரம், இறப்பிறமாதுச் சபைச் செபகங்கள் ஆகிய நூல்களையும் கொழும்பில் இராசவாசல் முதலியாரான மருதப்பிள்ளை மேல் மருதப்பக் குறவஞ்சி என்னும் நூலையும் சூடாமணி நிகண்டின் இரண்டாம் பகுதிக்கு 20 பாடல்களையும் பன்னிரண்டாம் பகுதிக்கு 100 பாடல்களையும் இயற்றியுள்ளார். இவருக்குக் கூழங்கைத் தம்பிரானால் இயற்றப்பட்ட யோசேப்புப் புராணம் உரிமை செய்யப்பட்டதாக அறியக்கிடக்கின்றது. இவரால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு ஒல்லாந்தரின் அச்சுக்கூடத்தில் 1749 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 172-173