ஆளுமை:பிரமிள், தருமராஜன்

From நூலகம்
Name பிரமிள்
Pages தருமராஜன்
Pages அன்னலட்சுமி
Birth 1939.04.20
Pages 1997.01.06
Place திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிரமிள், தருமராஜன் (1939.04.20 - 1997.01.06) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தருமராஜன்; தாய் அன்னலட்சுமி. இவர் நவீன தமிழின் முதன்மைக் கவிஞராகவும் விமர்சகராகவும் சிறுகதையாசிரியராகவும் ஓவியராகவும் களிமண் சிற்பங்கள் செய்வதில் வல்லவராகவும் விளங்கினார்.

இவரது படைப்புக்கள் 1960 இல் சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்துப் பத்திரிகை மூலம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம் ஆகிய கவிதை நூல்களையும் விமரிசன ஊழல்கள், ஶ்ரீலங்காவின் தேசிய தற்கொலை, தமிழின் நவீனத்துவம் ஆகிய விமர்சன நூல்களையும் ஆயி, லங்காபுரி நாஜா ஆகிய புனைகதை நூல்களையும் பிறேமிள் என்ற பேட்டி நூலையும் வெளியிட்டுள்ளார். மேலும் இவரது மறைவுக்குப் பின்பும் இவரது பல நூல்கள் வெளிவந்தன.


வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 229-234