ஆளுமை:பாலச்சந்திரன், செல்லையா

From நூலகம்
Name பாலச்சந்திரன்
Pages செல்லையா
Birth 1959.03.28
Place புத்தூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலச்சந்திரன், செல்லையா (1959.03.28 - ) யாழ்ப்பாணம், புத்தூரைப் பிறப்பிடமாகவும் வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்பக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. இவர் ஆலயங்களுக்குரிய வாகனங்கள், சித்திரத்தேர்கள், மஞ்சங்கள், சப்பைரதங்கள் நிர்மாணிப்பதில் வல்லவர். இவர் சிற்பக் கலையைத் தொழிலாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்.

இவரின் கைவண்ணத்தைப் பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயம், நீர்வேலி கந்தசுவாமி கோவில், அல்வாய் மாலிசந்திப் பிள்ளையார் ஆலயம், நல்லூர் மூத்த விநாயகர் ஆலயம், சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயம், உரும்பராய் கற்பக விநாயகர் ஆலயம் போன்றவற்றின் சித்திரத்தேர்கள், சப்பைரதங்கள், கைலாய வாகனங்கள் என்பன காட்டி நிற்கின்றன.

இவருக்கு இளங்கலைமாமணி, பார்வத சிற்பபாலன், சிற்பரதகலாசம்கிரகர், சிற்பக்கலாரத்தினம், ரத நிர்மாண சிம்மம், சிற்பானந்த பானு, ரதகலாசூரி, ரதகலா அருவி, ரதகலாஞானி என்னும் பட்டங்களை ஆலய நிர்வாகங்கள், பிரதேச செயலகங்கள் வழங்கிக் கௌரவித்துள்ளன.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 210