ஆளுமை:பாலசிங்கம், வே

From நூலகம்
Name பாலசிங்கம்
Pages பிறப்பு=1929.09.15
Birth {{{பிறப்பு}}}
Pages 2017.06.27
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசிங்கம், வே யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளத்தைச் சேர்ந்த ஆளுமை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைப் பட்டதாரியாகிய இவர் இலங்கையில் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தை பொறுப்பேற்றுச் செயற்படுத்தியோருள் முக்கியமானவர். 1959ஆம் ஆண்டு அண்ணாமலை இசைத் தமிழ் மன்றம் அண்ணாமலைப் பல்கலைக்கழகததில் பட்டம் பெற்ற சங்கீத பூஷணம் வி.நமசிவாயம் அவர்களால் அமைக்கப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலாளராகப் பெறுப்பேற்று வருடந்தோறும் இசை விழாக்களையும் நடத்தி வந்தார்.

இலங்கை வானொலியின் வாய்ப்பாட்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட அதியுயர் வகுதிக் கலைஞர்களுள் ஒருவராகவும் இவர் விளங்கினார். தனது குலதெய்வமாகிய பிரப்பங்குளம் மாரியம்மன் மீது பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.