ஆளுமை:பாத்திமா பாரிஹா, பாரூக் இம்தியாஸ்

From நூலகம்
Name பாத்திமா, பாரிஹா
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா பாரிஹா, பாரூக் இம்தியாஸ் சீனன்கோட்டை, பெருகமலையை வசிப்பிடமாகக்கொண்டவர். தர்கா நகர் அல் ஹம்ரா பாடசாலை பெண்கள் மத்திய கல்லூரி, கல்-எளிய அரபுக் கல்லூரி போன்றவற்றில் கல்வி கற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர் கல்வி டிப்ளோமா பட்டதையும் பெற்றுள்ளார்.

19984ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். இவரின் கவிதைகள் சஞ்சிகைகள், நாளிதழ்களிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள், விசேட கவியரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு கவிதை பாடியுள்ளார். ஒளிக்கதிர் என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.