ஆளுமை:பாத்திமா பஸீனா, ச.லெ

From நூலகம்
Name பாத்திமா பஸீனா
Pages சதக்குலெவ்வை
Pages மிஸ்றியா
Birth
Place பாலமுனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா பஸீனா, ச.லெ பாலமுனையில் பிறந்த எழுத்தாளர். பாலமுனை பஸீனா என்ற புனைபெயரிலேயே தன்னை அடையாளப்படுத்துகிறார். இவரது தந்தை சதக்குலெவ்பை; தாய் மிஸ்றியா. ஆரம்பக் கல்வியை பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்திலும் இடைநிலை , உயர்கல்வியினை அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையிலும் கற்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்று தற்பொழுது ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார்.

பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ள இவர் தற்பொழுது முகநூலில் எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் வானொலி மற்றும் பத்திரிகைகள் ஊடாக வெளியாகியுள்ளன. இவர் எழுதிய கவிதைத் தொகுதி ஒன்று வெகு விரைவில் வெளிவரவிருப்பதாகத் தெரிவிக்கின்றார் பஸீனா.

குறிப்பு : மேற்படி பதிவு பாத்திமா பஸீனா, ச.லெ அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.