ஆளுமை:பாத்திமா சூபாபாத்திமா சூபா, அப்துல் றஊப்

From நூலகம்
Name பாத்திமா சூபா
Pages அப்துல் றஊப்
Pages சித்தி ஹைரியா
Birth 1979.03.01
Place அம்பாறை கல்முனை மருதமுனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா சூபா, அப்துல் றஊப் (1979.03.01) அம்பாறை கல்முனை மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் றஊப் , தாய் சித்தி ஹைரியா. பாடசாலைக் கல்வியை கல்முனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் தரம் 01 தொடக்கம் 12 வரை கற்றார். 1998 ஆம் ஆண்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவுக்கு தெரிவாகி 2004 ஆம் ஆண்டு கலைமாணிப்பட்டதாரி பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணியை சமூகவியலில் நிறைவுசெய்தார். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்கல்வியினை மேற்கொண்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு ஆசிரியப் பணியை ஆரம்பித்து பின்னர் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார்.

10ஆவது வயதில் தினகரன் பத்திரிகைக்கு எனது கிராமம் என்னும் கட்டுரை மூலம் எழுத்துத் துறைக்கு பிரவேசித்தார். பாடசாலைக்காலத்தில் சிறந்த மேடைப்பேச்சாளராகவும் பாடசாலைச் சஞ்சிகையில் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற ஆக்கங்களையும் எழுதியுள்ளதோடு மித்திரன் நாளிதழுக்கும் தனது சிறுகதைகளை எழுதியுள்ளார். சமூகவலைத்தளமான முகநூலில் முகநூல்குழுமங்களான தேனி கலை இலக்கிய வட்டம், நுட்பக் குழுமம், சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா, உதயசூரியன் பத்திரிகை, உதயநிலவு கலைக்கூடம் போன்ற குழுமங்களில் கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2019 வெளியிடப்பட்ட உலக கவிஞர்களின் கவிதைகள் கொண்ட உலகசாதனையை வெற்றிபெற்ற கவிதைப்புத்தகத்தில் இவரின் கவிதையும் இடம்பெற்றிருப்பதோடு உலகச் சாதனையாளர் சான்றிதழும் கிடைக்கப் பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய உதயசூரியன் பப்ளிகேசனில் ஆலோசகராகவும் இருக்கின்றார். சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன் என்னும் கவிதை நூலை அண்மையில் வெளியிட இருப்புது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு பாத்திமா சூபா, அப்துல் றஊப் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.