ஆளுமை:பாண்டித்துரை, கஜறதி

From நூலகம்
Name கஜறதி
Pages பாண்டித்துரை
Pages யோகவைத்தியம்
Birth 1966.05.30
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாண்டித்துரை, கஜறதி (1966.05.30) யாழ்ப்பாணம் மல்லாகத்தில் பிறந்த எழுத்தாளர். மன்னார் வீதி பட்டாணிச்சூர், வவுனியாவை வதிவிடமாகக் கொண்டவர். இவரது தந்தை பாண்டித்துரை; தாய் யோகவைத்தியம். ஆரம்ப கல்வி மற்றும் உயர்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். எழுத்தாளர் கஜறதி கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி பாடசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். பாடசாலையில் ஆட்டோகிராப் மூலமாக கவிதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார். சிறுகதை, நாடகப்பிரதி, கவிதை எழுதுவது கவியரங்க ஆற்றுகையாளர், கவியரங்குகளில் கவிதை சொல்வது என பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். இவர் தனது கவிதைகளில் முகநூலில் மட்டுமே வெளியிட்டு வருவதாகக் கூறுகிறார். தனது பாடசாலை மாணவர்களுக்காக நாடகப்பிரதியாக்கம் செய்யும் போது கட்டாயமாக கவிதையும் அதில் எழுதி மாணவர்களுக்கு மேலும் ஊக்கப்படுத்துவதாகத் தெரிவிக்கிறார். நாடக நெறியாளர், நாடக எழுத்துருவாளர், நாடக ஒப்பனையாளர் என நாடகத்துறை சார்ந்து பன்முகத்திறமைகளைக் கொண்டவர். புதுப்பாடம் சிறுவர் அரங்கு நாடக நூலாசிரியருமாவார். கல்வியியல் அரங்கு அரங்க செயற்பாட்டுக் குழுவின் செயற்பாட்டாளராகவும் வவுனியா பிரதேச சபையின் கலாசார பேரவை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளார். வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உபசெயலாளராகவும் உள்ளார். அத்தோடு தனது சிறுகதைகளும் மாணவர்களுக்காகவே எழுதுவதாகத் தெரிவிக்கிறார். பயிற்சிப்பட்டறைகளின் போது மாணவர்களுக்காக சிறுகதைகளை எழுதி வருவதாகக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர். மாணவர்களுக்கு மட்டுமே சிறுகதைகளை எழுதி வந்த இவர் தன்னை சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு அரச ஊழியர் ஆக்கப்போட்டியில் அது காசை செலவளியாது என்னும் தலைப்பில் எழுதி ஆறுதல் பரிசையும் பெற்றுக்கொண்டார். இணையத்தின் ஊடாக சமையல் குறிப்புக்களை எழுதியும் போட்டிகளில் கலந்து கொண்டும் பரிசில்கள் சான்றிதழ்களை பெற்றுள்ளார். எழுத்தாளர் இணையத்தின் ஊடாகவும் கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். தன்னை ஒரு சிறுகதை விமர்சகராகவும் அடையாளப்படுத்தியுள்ளார். வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு பாண்டித்துரை கஜறதி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

விருது. 1. எழுநீ என்னும் விருதை வவுனியா நகரசபை இவருக்கு நாடகத்துறைக்காக வழங்கி கௌரவித்துள்ளது. 2. வவுனியா பிரதேசசபை, வவுனியா பிரதேச கலாசார சபையும் இணைந்து கலாநேத்ரா என்னும் விருதை நாடகத்துறைக்கு வழங்கியுள்ளது.