ஆளுமை:பரராசசிங்கம், சுப்பையா

From நூலகம்
Name பரராசசிங்கம்
Pages சுப்பையா
Birth
Pages 2003.12.14
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரராசசிங்கம், சுப்பையா (- 2003.12.14 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை சுப்பையா. இவர் தான் பிறந்த மண்ணில் கல்வி கற்று, இளம் பராயத்தில் தொழில் நிமித்தம் சாவகச்சேரிப் பட்டினத்தில் வர்த்தகர்களாக இருந்த தன் உறவினர்களிடம் தொழில் கற்று, சிறிது காலத்தின் பின்னர் சொந்தமாகத் தொழில் செய்தார்.

இவர் இளமையில் அரசியல் நாட்டம் கொண்டு, சாவகச்சேரியில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான வி.நவரெட்ணத்துடன் இணைந்து அவரது தொண்டராகவும் நண்பராகவும் இருந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.

இவர் யாழ்ப்பாணத்தில் போசனசாலை ஒன்றைத் தொடங்கினார். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் அரச உதவியுடன் தன் கிராமம் முழுவதற்கும் கூட்டுறவுச் சங்கமூடாகப் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும் போக்குவரத்துச் சீர்திருத்தத்திற்கும் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 266