ஆளுமை:பத்மா, சோமகாந்தன்

From நூலகம்
Name பத்மா, சோமகாந்தன்
Pages பஞ்சாதீஸ்வரக் குருக்கள்
Pages அமிர்தம்மா
Birth 1934.03.15
Place வண்ணார்பண்ணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மா, சோமகாந்தன் (1934.03.15 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை பஞ்சாதீஸ்வரக் குருக்கள்; தாய் அமிர்தம்மா. இவர் 1954 ஆம் ஆண்டு சுதந்திரன் சிறுகதைப் போட்டியில் தனது முதலாவது சிறுகதையை எழுதி எழுத்துலகிற் பிரவேசித்துத் தொடர்ந்து கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கியக் கட்டுரைகள், பெண்ணிய ஆய்வுகளை எழுதியதுடன் மேடைப்பேச்சுக்களிலும் சிறந்து விளங்கினார். இவர் ”புதுமைப்பிரியை” என்னும் புனைபெயரில் ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதிவந்தார்.

இவர் தினக்குரல் பத்திரிகையில் சாதனைப் பெண் பகுதியில் தொடர்ந்து எழுதி வந்தார். பெண்ணின் குரல் என்னும் காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியதுடன் சொல் என்ற சஞ்சிகையின் ஆசிரியராவும் பணியாற்றியுள்ளார். இவர் கடவுளின் பூக்கள், புதிய வார்ப்புக்கள், வேள்வி மலர்கள், மாண்புறு மகளிர் (புகழ் பூத்த ஈழத்துப் பெண்களின் வரலாறு), அனுமன் கதை ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வீரகேசரிப் பத்திரிகையில் 2002 - 2005 வரை வாராந்தம் எழுதிவந்த ”நெஞ்சுக்கு நிம்மதி” என்னும் கேள்வி பதில் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இவரது ஆளுமைமைக் கெளரவித்து ”இலக்கியக் கலாவித்தகி”, ”செஞ்சொற்செல்வி” முதலிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 300 பக்கங்கள் 126-127
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 60
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 89-92
  • நூலக எண்: 2077 பக்கங்கள் 05-07
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 30