ஆளுமை:பஞ்சலிங்கம், தம்பிப்பிள்ளை

From நூலகம்
Name பஞ்சலிங்கம்
Pages தம்பிப்பிள்ளை
Birth 1950.07.05
Pages 2008.04.03.
Place அரியாலை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சலிங்கம், தம்பிப்பிள்ளை (1950.07.05 - 2008.04.03) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பிப்பிள்ளை. இவர் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயத்திலும் இடை நிலைக் கல்வியை சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்று யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் இலங்கைத் தமிழாசிரியர் சங்கத்தின் மூத்த துணைப் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் அரியாலை சனசமூக நிலையம், அரியாலை ஐக்கிய கழகம் ஆகியவற்றின் கலைப்பகுதித் தலைவராகச் சேவையாற்றியுள்ளார்.

இவர் எல்லாளன், இராஜ இராஜ சோழன், நல்லைநகர் நாவலர், அபஸ்வரகீதம், வீடுகள் விழிக்கின்றன, ஆத்மாவின் ராகம், தெய்வப்பாவை, ஒதல்லோ, குரங்குகள், இலங்கேஸ்வரன், லண்டன் மாப்பிள்ளை ஆகிய நாடகங்களில் நடித்ததன் மூலம் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக வெளிநாடு சென்ற வேளையில் தன் நடிப்பினை அங்கும் வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் அரியாலை எண்பத்தாறாவது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் போது சமூகத்தின் சிறந்த நாடகக் கலைஞனுக்கான கௌரவ விருது வழங்கப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

{{வளம்|7571|175}