ஆளுமை:பஞ்சலிங்கம், இராசையா

From நூலகம்
Name பஞ்சலிங்கம்
Pages இராசையா
Birth 1949.08.24
Place பருத்தித்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சலிங்கம், இராசையா (1949.08.24 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இராசையா. இவர் தனது கல்வியை யாழ்ப்பாணம் சித்திவிநாயகர் வித்தியாசாலையிலும் யாழ்ப்பாணம் வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்றார். மேலும் இவர் நாடகத் துறை சார்ந்த அறிவை குழந்தை சண்முகலிங்கன், ஏ. தார்சீசியஸ், ஶ்ரீசங்கர், கலைச்செல்வன் ஆகியோரிடம் பெற்று 1965 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் நாடகத்துறையில் கதை எழுதுபவராகவும் நடிகராகவும் இலக்கியத்துறையில் கவிதை, சிறுகதை, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டும் விளங்கினார். மேலும் இவர் சிலம்புச் செல்வி என்னும் நாடகத்தினை 49 இராகங்களுடனும் 60 பாடல்களுடனும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் பாஞ்சாலி சபதம் என்னும் ஆங்கில நாடகத்தை நூல் வடிவில் வெளியிட்டதுடன் அமைதியான சவ அடக்கம் என்னும் ஆங்கிலச் சிறுகதையையும் பேரலை என்னும் ஆங்கிலத் திரைப்படப் பாடலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவர் கலைக்குச் செய்த சேவைக்காக நாடகச் சக்ரவர்த்தி என்னும் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் கலைமானி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 190-191