ஆளுமை:பசுபதிராஜா, பத்மன்

From நூலகம்
Name பசுபதிராஜா
Pages பத்மன்
Pages கதிராசிப்பிள்ளை
Birth
Place நெடுந்தீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பசுபதிராஜா, பத்மன் யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பத்மன்; தாய் கதிராசிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம், நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இலங்கையில் வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த விடுதலைச் சுவடுகள் என்ற கட்டுரையே இவரது முதல் படைப்பாகும். மேலும் பல நாடகங்களையும் இலங்கையில் நடித்துள்ளார். இவரது முதலாவது நாடகம் சாவுமணி 1978 ஆம் ஆண்டு நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தில் சரஸ்வதி அனுஸ்டான நாளின்போது மேடையேற்றப்பட்டது. புகலிடத்தில் விடிவின் வழி, விளக்கேற்றி வைக்கின்றேன் ஆகிய நாடகங்களை எழுதி நடித்துள்ளார்.

இவர் சுமார் 50 சிறுகதைகளையும் 100 கவிதைகளையும் 20 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய செங்காற்று என்னும் கவிதைத் தொகுப்பு 1977 இல் ஜேர்மனி எசன் நகரிலிருந்து வெளிவந்த தமிழருவிப் பத்திரிகையின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் இடம்பெற்ற கவிஞர்கள் கௌரவிப்பில் இவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


Resources

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 48-50
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 88-90