ஆளுமை:பசுபதிப்பிள்ளை, வ.

From நூலகம்
Name பசுபதிப்பிள்ளை
Birth
Place புங்குடுதீவு
Category சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பசுபதிப்பிள்ளை, வ புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமூக சேவையாளர். இவர் முதலில் விதானையாளராகக் கடமை புரிந்து பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கிராம சங்க தலைவராகவும் கிராம கோட்டு நீதிபதியாகவும் இருந்து தொண்டாற்றினார்.

இவர் நாட்டின் பல கோணங்களிலும் பல கல்வி நிலையங்கள் தோன்றக் காரணமாகவிருந்தார். அவற்றுள் ஶ்ரீ கணேச வித்தியாசாலை, பராசக்தி வித்தியாசாலை போன்றவற்றைத் தமது முயற்சியால் அமைத்துத் திறம்பட நடத்தினார். கணேச வித்தியாசாலையானது புரட்டாஸ்தாந்து மதப் பாடசாலைகள் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் சைவப் பெருமக்கள் பலரது ஒத்துழைப்புடன் பெரியார் நீ.அம்பலவாணர் வளவில் 1910 ஆம் ஆண்டு முதன் முதலாக நிறுவப்பட்ட பாடசாலையாகும். தொடர்ந்து அந்த காலத்தில் 1914 ஆம் ஆண்டு ஆவணி வரை அரச நன்கொடை இன்றிச் சொந்த முயற்சியில் இந்தப் பாடசாலையை நடத்தி வந்தார். இவர் புங்குடுதீவின் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் முதலிடம் பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 203-205

வெளிஇணைப்பு