ஆளுமை:பசுபதி, சிதம்பரபிள்ளை

From நூலகம்
Name பசுபதி
Pages சிதம்பரபிள்ளை
Birth 1946.01.12
Place குடாரப்பு
Category அரச உத்தியோகத்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பசுபதி, சிதம்பரபிள்ளை (1946.01.12 - ) யாழ்ப்பாணம், வடமராட்சி, குடாரப்பைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை சிதம்பரபிள்ளை. இவர் நாகதம்பிரான் புகழ்மாலை, நாகதம்பிரான் மான்மியம், கண்ணகியம்மன் காவியம் ஆகிய பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் சிறுதொண்டர் நாயனார், திருநீலகண்டர், அருணகிரிநாதர், ஶ்ரீவள்ளி, கண்ணகியம்மன் முதலான புராணக் கவிதைகளை வில்லிசைப் பாடல்களாக இசைத்து வருவதுடன் சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, பாஞ்சாலி சபதம் ஆகிய இசை நாடகங்களிலும் கூத்துக்களிலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 151