ஆளுமை:பசுபதி, கந்தன்

From நூலகம்
Name பசுபதி
Pages கந்தன்
Birth 1946.07.25
Place சுழிபுரம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பசுபதி, கந்தன் (1946.07.25 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தன். இவர் 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் 30 வருடங்களிற்கு மேலாக நாட்டுக்கூத்திற்குப் பக்கவாத்தியமாக ஆர்மோனியத்தை வாசித்து வந்ததுடன் காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்து நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியுள்ளார்.

இவரது கலைத்திறமைக்காகத் திருநாவுக்கரசு நாடக மன்றத்தால் கரஞானபதி என்ற பட்டத்தையும் 2003 ஆம் ஆண்டு வலிகாமம் பிரதேசக் கலாச்சாரப் பேரவையால் கலைவாருதி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 190