ஆளுமை:பக்கீர்தம்பி, முஹம்மது இஸ்மாலெப்பை
Name | பக்கீர்தம்பி |
Pages | முஹம்மது இஸ்மாலெப்பை |
Pages | பாத்திமா |
Birth | 1923.05.06 |
Pages | 1985.03.17 |
Place | சம்மாந்துறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பக்கீர்த்தம்பி,முஹம்மது இஸ்மாலெப்பை (1923.05.06-1985.03.17 ) சம்மாந்துறைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார்.இவரது தந்தை பெயர் முஹம்மது இஸ்மாலெப்பை தாயின் பெயர் பாத்திமா மனைவி பெயர் சீனத்தும்மா . இவர் 1952 ஆம் ஆண்டில் எழுத்துத்துறை கவிதைத்துறைகளில் அடி எடுத்து வைத்தார் இவர் ஓர் ஆசிரியராக நியமனம் பெற்று கல்வி கற்பித்து அதிபராக பதவி உயர்வு பெற்று இலங்கினார்.
இளமைக்காலத்தில் இருந்தே பேச்சுக்கலையில் வல்லவர் . கவிதை கட்டுரை எழுதுவதினும் ஆற்றலும் ஆளுமையும் மிக்கவர் . புரட்சிநேசன், வித்தகன், தயாளன், ஈழமேகம் எனும் புனைப் பெயர்களில் கவிதைகள் கட்டுரைகள் எழுதி வந்தார். சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகி இருக்கின்றன. வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கின்றன.
1963 ஆம் ஆண்டு அப்துல் றஷீது அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து "அறவழிக்கீதம்" என்கிற ஒரு நூலை எழுதி இருந்தார். 1983 அம் ஆண்டு "மழையும் துளியும்" என்கிற பெயரிலான இவரது கவிதைத் தொகுப்பை சம்மாந்துறை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்டு இருந்தது. 1978 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் அகில இலங்கை மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் பங்குபற்றி முதலாவது இடத்தையும் பரிசிலையும் பெற்றார் . 1962 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாத்துரை பங்குபற்றிய ஒரு பெருவிழாவில் இவர் சொற்பொழிவு ஆற்றிய போது இவரது பேச்சுவண்மையை வியந்து "ஈழமேகம்" என்று பாராட்டிப் புகழ்ந்த அந்தப் பட்டப்பெயர் இன்றுவரையிலும் எல்லோரது நாவிலும் இழைந்து கொண்டே இருக்கின்றது. இவர் 1985.03.17 ஆம் திகதி மரணம் எய்தினார் .