ஆளுமை:நீக்கிலாஸ்பிள்ளை, பரமானந்தர்

From நூலகம்
Name நீக்கிலாஸ்பிள்ளை
Pages பரமானந்தர்
Birth
Place சண்டிலிப்பாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நீக்கிலாஸ்பிள்ளை, பரமானந்தர் யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பரமானந்தர். இவர் குலத்துங்கர் என்ற இயற்பெயரைக் கொண்டவர். ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் பெரும் புலமை படைத்திருந்த இவர், அரசாங்க மொழிபெயர்ப்பு முதலியாராகச் சில காலம் நெடுந்தீவில் பணியாற்றினார். வட்டுக்கோட்டை செமினரி சாத்திரக் கலாசாலையில் சில காலம் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

கந்தரந்தாதி முதலான நூல்கள் சிலவற்றுக்குப் பொருள் சொல்வதில் திறமை வாய்ந்தவராக விளங்கிய இவர், எக்காலக் கண்ணி என்னும் நூலை இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 169-170