ஆளுமை:நிவேதா, உதயராயன்

From நூலகம்
Name நிவேதா
Pages நாகலிங்கம்
Pages ஆயிலியம்
Birth 1966.04.04
Pages -
Place இணுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிவேதா, உதயராயன் (1966.04.04 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் ஆயிலியம். இவர் இணுவிலில் பிறந்து, தன் பதின்ம வயதில், 1985இல் பெற்றோருடன் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 2003இல் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருகிறார். இவரது தந்தை நாகலிங்கம். தாய் ஆயிலியம். ஆரம்பக் கல்வியை இணுவில் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பள்ளியிலும், இடைநிலை உயர் கல்வியை வேம்படி மகளிர் கல்லூரியிலும், பட்டப்படிப்பை இந்தியாவில் பாரதியார் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தவர். 1999ஆம் ஆண்டிலிருந்து புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகளுக்கு, தாய்மொழி தமிழைக் கற்பித்து வருவதோடு, கடந்த பதினொரு ஆண்டுகளாகப் புலம்பெயர் சிறுவர்களுக்கான தமிழ்ப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

2012 முதல் யாழ் இணையத்தில் எழுத ஆரம்பித்து கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என எழுதுவதனூடாகத் தன்னை ஒரு எழுத்தாளராக அடையாளப்படுத்தியுள்ளார். “நிறம்மாறும் உறவுகள்”, “உணர்வுகள் கொன்று விடு”,மனமும் இடம்பெயரும் எனும் சிறுகதைத் தொகுப்புகளும், “நினைவுகளின் அலைதல்” என்னும் கவிதைத் தொகுதியும், “வரலாற்றைத் தொலைத்த தமிழர்“ என்னும் தமிழர் வரலாற்றுத் தொன்மை பற்றி ஆராயும் ஒரு நூலுமாக நான்கு நூல்களை எழுதியுள்ளார்.

இவர் ஊடகத்துறையிலும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். உயிரோடைத் தமிழ் வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும், நாடகப் பிரதிகளை எழுதுபவராகவும், சிறுவர்களுக்கான கூத்துப் பாடல்களை எழுதி, பாடி, அரங்கேற்றியும் வந்துள்ளார். கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர்களுக்கான பட்டறை ஆசிரியராகவும் எட்டு ஆண்டுகள் கடமையாற்றி உள்ளார். பல அரங்க நிகழ்வுகளில் பங்கேற்ற அனுபவமும் உண்டு.