ஆளுமை:நாகலிங்கம்பிள்ளை, சின்னத்தம்பியார்

From நூலகம்
Name நாகலிங்கம்பிள்ளை
Pages சின்னத்தம்பியார்
Pages அன்னம்மையார்
Birth 1898
Pages 1962
Place வண்ணார்பண்ணை
Category எழுத்தாளர், பதிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம்பிள்ளை, சின்னத்தம்பியார் (1898-1962) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர். இவரது தந்தை சின்னத்தம்பியார்; தாய் அன்னம்மையார். இவர் நன்னூல், திருக்குறள், திருக்கோவையார், யாப்பருங்கலகாரிகை ஆகியவற்றுடன் சித்தாந்த சாத்திரங்களையும் கற்றுக் கொண்டார்.

இவர் 1930 ஆம் ஆண்டளவில் அச்சியந்திரசாலை ஒன்றை வதிரியில் ஸ்தாபித்து ஞானசித்தி பத்திரிகையை நடாத்தி வந்தார். இவர் திருநெல்வாயிற் புராணம், தக்ஷண கைலாச புராணம், கதிர்காம புராணம், திருவைகற் புராணம், திருத்தில்லைப்பதி புராணம் போன்ற நூல்களை இயற்றியதோடு நாலு மந்திரிக் கும்மி, கரவை வேலன் கோவை, சி.தாமோதரம்பிள்ளை சரித்திரம், நல்லைவெண்பா, தஞ்சை வாணன் கோவை, சந்தியாவந்தன ரகசியம் போன்ற நூல்களைப் பதிப்பித்துமுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 167-168