ஆளுமை:நாகராசா, இளையதம்பி

From நூலகம்
Name நாகராசா
Pages இளையதம்பி
Pages பாக்கியலட்சுமி
Birth 1918.03.05
Pages 1975.11.14
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, இளையதம்பி (1918.03.05 - 1975.11.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், விவசாயி. இவரது தந்தை இளையதம்பி; தாய் பாக்கியலட்சுமி. இவர் 37 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்தார். சிறந்த அறிவு, குரல்வளம், சிறந்த கையெழுத்து, கதை சொல்லும் திறன் போன்ற பல திறமைகள் இவரை நல்ல ஆசிரியரென விளங்க வைத்தன.

இவர் வேலணை கிராம சபையின் முதலாம் வட்டார அங்கத்தவராக இருந்து கிராம உட்கட்டுமானப் பணிகள், சமுதாய அபிவிருத்திச் செயற்பாடுகள் போன்ற பல சமூகச் சேவைகளைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 340-341