ஆளுமை:நாகமுத்து, முருகர்

From நூலகம்
Name நாகமுத்து
Pages முருகர்
Birth 1938.07.27
Place மாசார்
Category நடிப்புக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகர் நாகமுத்து இயக்கச்சியில் (1938) பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளி/ இயக்கச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பயின்றார். இவர் ஆரம்பத்தில் சிறுசிறு நாடகங்களிலும், பெண் பாத்திரங்களிலும் வேடம் பூண்டு நடித்து வந்துள்ளார். சிறிது காலம் அரியாலை பார்வதி வித்தியாசாலையிலும் கல்வி பயின்றுள்ளார். தொடர்ந்து பளை மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் இவர் தொடர்ந்து வள்ளி, பவளக்கொடி, காத்தவராயன் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். பின்பு அரசியலில் ஈடுபடத்தொடங்கி புலோப்பளைக் கிராம சபைக்கு இருமுறை தெரிவு செய்யப்பட்டதுடன் ஒரு முறை புலோப்பளை கிராம சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நெறியாளர் குழுவின் அங்கத்தவராகவும் தெரிவு செய்யப்பட்டார். மேலும் ஆரம்ப கால மல்வில் கிருஷ்ணன் கோவில் தரமகர்த்தா சபையின் செயலாளராகவும் செயற்ட்டதோடு மல்வில் கிருஷ்ணன் கோவில்,மண்டலாய் பிள்ளையார் கோவில் ஆகிய ஆலயங்களில் சமயப்பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதைவிட கிராம அபிவிருத்திச் சங்கம், கமக்கார அமைப்பு என்பவற்றில் அங்கத்தவராக இருந்ததோடு தற்போது முதியோர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகின்றார். இவருக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் 2022 ஆம் ஆண்டு “நடிப்புக்கலைஞர்" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.