ஆளுமை:நாகமணி, நாகரெத்தினம்

From நூலகம்
Name நாகமணி
Pages நாகரெத்தினம்
Pages சிவனேசம்
Birth 1971.10.14
Pages -
Place பண்டாரக்கட்டு, வேப்பவெட்டுவான், கரடியனாறு மட்டக்களப்பு
Category வேட மதகுரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நாகரெத்தினம் நாகமணி (1971.10.14) இவர் பண்டாரக்கட்டு, வேப்பவெட்டுவான், கரடியனாறு மட்டக்களப்பைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த வேட மதகுருவும் மற்றும் பன்முக ஆளுமையாளரும் ஆவார். இவரது தந்தை நாகரெத்தினம்;தாய் சிவனேசம். இவரது கணவரின் பெயர் வேலாயுதம். இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை வேப்பவெட்டுவான் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் பெண் வேட மதகுருவாகவும், சேனைப்பயிற்செய்கையாளராகவும் காணப்படுகின்றார். இப்பொது இவர் கணவனை இழந்த சூழ்நிலையிலும் திறமான சுயதொழில் முயற்சியாளராகவும், பல உள்ளூர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுபவராகவும், அதே சமயம் தனது வழிபாட்டு நடவடிக்கைகளுடன் குணமாக்கலைச் செய்யும் ஓர் ஆளுமையாகவும் கூட காணப்படுகின்றார்.