ஆளுமை:நல்லதம்பி, வீ. வ.

From நூலகம்
Name நல்லதம்பி
Birth
Place புங்குடுதீவு
Category அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லதம்பி, வீ. வ. யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அதிபர். இவர் 1973 ஆம் ஆண்டு புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபராகவும் 1954 ஆம் ஆண்டு யாழ். மாவட்ட கிராமாட்சி மன்ற சமாசத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழ்கின்ற வேளை சைவநீதி என்னும் மலரை வெளியீடு செய்தார்.

இவர் 1977 ஆம் ஆண்டு ஸ்காபரோ கலாச்சார விருது விழாவில் இலக்கியத்திற்கான விருதைப் பெற்று கொண்டார். இதுவே கனடா நாட்டில் இலங்கைத் தமிழர் ஒருவர் பெற்ற முதல் விருதாகக் கருதப்படுகின்றது. இவருக்கு 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மொரிசியசில் நடைபெற்ற எட்டாவது உலக சைவ மகாநாட்டில் இவரின் சைவத் தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டிச் 'சைவ சித்தாந்தக் கலாநிதி' என்னும் சிறப்புப் பட்டத்தை உலக சைவப் பேரவை வழங்கிக் கௌரவித்துள்ளது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 185-186
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 89