ஆளுமை:நடராஜா, இராமச்சந்திரன்

From நூலகம்
Name நடராஜா
Pages இராமச்சந்திரன்
Birth
Place கோப்பாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, இராமச்சந்திரன் யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமச்சந்திரன். இவர் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு வரையும் கற்றுப் பின்னர் கொழும்பிலுள்ள வெளிவாரிப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பயின்றார்.

இவர் தனது இளமைக் காலத்தில் கோப்பாய் வடக்கில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நிறுவி அங்கு ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். பின்னர் புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்று, 1996 இல் ஜேர்மன்-தமிழ்க் கலாச்சார ஒன்றியத்தின் தலைவராகவும் 2001 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்து மாமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் 1997 ஆம் ஆண்டு "தமிழலை" என்னும் கலை -கலாச்சார- இலக்கியச் சமூகக் காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

Resources

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 83-84