ஆளுமை:நடராசா, பிள்ளையினார்

From நூலகம்
Name நடராசா
Pages பிள்ளையினார்
Birth 1939.08.14
Place இளவாலை, மயிலங்கூடல்
Category கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, பிள்ளையினார் (1939.08.14 - ) யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைச் சேர்ந்த கவிஞன், ஆசிரியர். இவரது தந்தை பிள்ளையினார். இவர் மயிலங்கூடலூர் நடராசா என்றும், ஆடலிறை என்றும் அறியப்படுபவர். இவர் பண்டிதம் என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்துள்ளார்.

இவர் சிறுவர் இலக்கியத்துறையில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். இவரின் கவிதைகள் ஈழத்துப் பத்திரிகைகளில் காலத்திற்கு காலம் ஏற்படுகின்ற மாற்றங்களை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன. இவரது ஆடலிறை குழந்தைப் பாடல்கள் நூல் யாழ்ப்பாணம் இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 22
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 35