ஆளுமை:நடராசா, கிருஷ்ணபிள்ளை

From நூலகம்
Name நடராசா
Pages கிருஷ்ணபிள்ளை
Birth
Place உடுப்பிட்டி
Category ஆசிரியர், அதிபர், யாழ். பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, கிருஷ்ணபிள்ளை யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், யாழ். பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர். இவரது தந்தை கிருஷ்ணபிள்ளை. இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா, கல்வியியல் முதுமாணிப் பட்டம் ஆகியனவற்றைப் பெற்றுள்ளார்.

இவர் கைகேயி சூழ்வினைப் படலம், திருக்குறள், அங்கவியல், தேர்ந்த செய்யுட்கோவை ஆகிய பாடநூல்களுக்கு உரை எழுதி உள்ளதோடு இலக்கண வினாவிடை தொடர்பான நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பணிகளுக்காகக் கலைஞான வாரிதி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 155