ஆளுமை:தேவதாஸ், கண்ணத்துரை

From நூலகம்
Name தேவதாஸ்
Pages கண்ணத்துரை
Birth 1954
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவதாஸ், கண்ணத்துரை (1954- ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவரது தந்தை கண்ணத்துரை. இவர் ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றவர். இவர் 1971 ஆம் ஆண்டு புங்குடுதீவு மேற்கு மக்கள் கமிட்டியில் அங்கத்தவராக இருந்ததுடன் 1973 இல் இளைஞர் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.

சிறுவயது முதல் பெரியபுலம் பிள்ளையார் கோவில் மீது பக்தி கொண்டு செயற்பட்ட இவர், பின்னர் அக்கோவிலின் நிர்வாகசபைத் தலைவராகவும் 1983 ஆம் ஆண்டு புங்குடுதீவு மேற்கு கிராமோதய சபைத் தலைவராகவும் கடமையாற்றினார். இவர் திருநாவுக்கரசின் சர்வோதய இயக்கத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 270-271