ஆளுமை:தேவசகாயம்பிள்ளை, ஆசீர்வாதம்

From நூலகம்
Name தேவசகாயம்பிள்ளை
Pages ஆசீர்வாதம்
Birth 1915.10
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவசகாயம்பிள்ளை, ஆசீர்வாதம் (1915.10 - ) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை ஆசீர்வாதம். இவர் கொழும்புத்துறை புனித சூசையப்பர் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் இம்மானுவல் மாலையை அண்ணாவிமார் உதவியுடன் எழுதி மேடையேற்றியுள்ளார்.

இவர் இம்மானுவல் நாடகம், மனோகரா நாட்டுக்கூத்து, ஜோசப் வாஸ் நாடகம், அரிச்சந்திரா நாடகம், பூதத்தம்பி இசை நாடகம், வெற்றியின் இரகசியம், இதயப் பரிசு, சூழ்ச்சிக்காரன் வீழ்ச்சி ஆகிய நாடகங்களையும் மண்ணுலக மோட்சம், வில்லுக்கு விசயன், மண் பறி போனால், ஏன் வேண்டும் புயல், பரோக்கின் புகழ், தமிழ்க் காதல் ஆகிய கவிதைகளையும் கர்வம் கரைந்தது என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார். மேலும் இவரது இம்மானுவேல் நாடகம் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசைப் பெற்றுள்ளது.

Resources

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 55-57