ஆளுமை:தேவகுமாரன், கந்தசாமி

From நூலகம்
Name தேவகுமாரன்
Pages கந்தசாமி
Birth 1954.10.28
Place இணுவில்
Category ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவகுமாரன், கந்தசாமி (1954.10.28 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். இவரது தந்தை கந்தசாமி. இவர் யாழ்ப்பாணம் இந்து இளைய தம்பி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் இடை நிலைக் கல்வியையும் கற்றார். இவர் கிளே, பிளாஸ்ரிக் ஆகியவற்றில் உருவங்கள் செய்வது, அச்சுக்கள் செய்வது, சிலைகள் உருவாக்குவது ஆகியவற்றை ஆசிரியர் சின்னத்துரையிடமிருந்து கற்றுக் கொண்டு பின்னர் 1972 ஆம் ஆண்டு இந்தியா சென்று திருச்சி மலைக்கோட்டைக் கணேசன் கலைக்கூடத்தின் ஆசிரியர் எம் வி. ராஜங்கத்திடம் ஓவியம் சம்பந்தமான விளக்கங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேறிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணம் வந்த இவர், தன் கலைச் செயற்பாட்டைத் தொழில் ரீதியாக மேற்கொண்டு புகைப்படங்களை எடுப்பதில் சிறப்பான கலைஞராக விளங்கியதுடன், பல ஆலயங்களுக்குத் திரைச் சீலைகள் வரைந்துமுள்ளார். அவற்றுள் இவரால் கதிர்காமம் திருமுருகன் ஆலயத்திற்கு மூன்று முகப்புத் திரைச் சீலைகள், வள்ளியம்மன் வாயிலுக்கு மூன்று திரைச்சீலைகள் வரையப்பட்டவை ஆகும்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 195
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 251