ஆளுமை:தெய்வேந்திரன், பொன்னம்பலம்

From நூலகம்
Name தெய்வேந்திரன்
Pages பொன்னம்பலம்
Pages பொன்னுப்பிள்ளை
Birth 1933.01.10
Place தெல்லிப்பளை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெய்வேந்திரன், பொன்னம்பலம் (1933.01.10 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஆசிரியர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை சங்கீத விரிவுரையாளர், உப அதிபர், அரச பரீட்சைத்திணைக்கள பிரதான கட்டுப்பாட்டுப் பரீட்சகர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் பொன்னுப்பிள்ளை. இவர் 1966 இல் சைவப்புலவர் பட்டமும் சங்கீத நுண்கலைமாணிப் பட்டத்துடன் விஷேட ஆங்கிலப் பயிற்சியும் பெற்றுள்ளார்.

இவர் பல நாடக, இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம், பண்ணிசை வேந்தன், கலை மாமணி போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 52