ஆளுமை:திவ்வியராஜன், வைரமுத்து

From நூலகம்
Name திவ்வியராஜன்
Pages வைரமுத்து
Pages இலக்குமி அம்மையார்
Birth
Place வரணி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திவ்வியராஜன், வைரமுத்து யாழ்ப்பாணம், வரணியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரமுத்து; தாய் இலக்குமி அம்மையார். கொழும்புப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பட்டப் பின் படிப்பைக் கற்றுத் தொடர்ந்து பனம் பொருள் அபிவிருத்திச் சபையின் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 1994 இல் இலரொன்ரோ நகரில் வெளிவந்த வாராந்தப் பத்திரிகையான சூரியன் இதழில் ஓர் ஈழத்து அகதியின் மனப் பதிவுகள் என்ற தலைப்பில் ஓர் ஆண்டுக்கு மேலாகத் தொடர் கட்டுரைகளை எழுதியதுடன் உதயன் இதழிலும் சிறுவர்களுக்கான வளரும் தளிர்கள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11667 பக்கங்கள் 57-60