ஆளுமை:திருவிளக்கம், கந்தையா

From நூலகம்
Name திருவிளக்கம்
Pages கந்தையா
Pages சீதப்பிள்ளை
Birth
Place புங்குடுதீவு
Category சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருவிளக்கம், கந்தையா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தை கந்தையா; இவரது தாய் சீதப்பிள்ளை. இவர் புங்குடுதீவு அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்றதுடன் வே.க.சோமசுந்தரம், கா.திருநாவுக்கரசு ஆகியோருடன் சேர்ந்து சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தார்.

இவர் தமிழரசுக் கட்சியின் அபிமானியாக இருந்து புங்குடுதீவுக்குப் பல தொண்டுகள் செய்தார். அவற்றுள் பலரது உதவியுடன் ஆஸ்பத்திரி வீதியில் தண்ணீர்த் தொட்டியை அமைத்தமையைக் குறிப்பிடலாம். ஆஸ்பத்திரி வீதி வைரவர் ஆலயத்தின் தர்மகர்த்தா சபையின் தலைவராக இருந்து அவ்வாலயத்தின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றினார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 217