ஆளுமை:திருமுருகன், ஆறுமுகம்

From நூலகம்
Name திருமுருகன்
Pages ஆறுமுகம்
Birth 1961.05.28
Place இணுவில்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமுருகன், ஆறுமுகம் (1961.05.28 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் யாழ். இந்துக் கல்லூரியிலும் மகாதேவா, க. சிவராமலிங்கம், க. சொக்கன், தங்கம்மா அப்பாக்குட்டி, இ. ஜெயராஜ் ஆகியோரிடமும் கல்வி பயின்று இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், கோண்டாவில் சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் கலைத்துறையில் 1978 ஆம் ஆண்டிலிருந்து ஈடுபடுவதுடன் தனது 11 ஆவது வயதில் பேச்சுத்துறைக்குள் நுழைந்து 16 ஆவது வயதிலிருந்து யாழ்மதி என்னும் சஞ்சிகையையும் அருள் ஒளி, இந்து ஒளி முதலிய இதழ்களையும் 21 ஆம் நூற்றாண்டில் இந்து சமய சீர்திருத்தச் சிந்தனைகள், இலக்கியம் கற்பித்தலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சமூகப் பணிகளில் இந்து ஆலயங்களின் பங்களிப்புக்கள், அமெரிக்காவை நோக்கிய ஆன்மீகப் பயணம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

இவர் செஞ்சொற்செல்வர், சிவத்தமிழ்ச் செல்வர் ஆகிய பட்டங்களையும் நல்லாசிரியர் விருது, செந்தமிழ் ஞாயிறு விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 31-32
  • நூலக எண்: 13872 பக்கங்கள் 03-276
  • நூலக எண்: 10062 பக்கங்கள் 41