ஆளுமை:திருத்துவராசா, இராயப்பு

From நூலகம்
Name திருத்துவராசா
Pages இராயப்பு
Birth 1951.03.21
Place சாவகச்சேரி, அல்வாய்
Category எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் அல்வாய் வடமேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு. இவர் ஆரம்பக் கல்வியைத் தென்மராட்சி கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் எஸ். எஸ். சி. வரை மட்டுவில் சந்திரபுஸ்கந்த வரோதய மகா வித்தியாலயத்திலும் கற்றதோடு கலாநிதி த. கலாமணி, சிவகுரு கணேசன் ஆகியோரிடம் இக்கலையைப் பயின்றார்.

இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வருபவர். இவரால் 2009 இல் பருவ பிரதேச கலாச்சாரக்கீதம் இயற்றப்பட்டது. இவர் தனது சகோதரனின் படைப்புக்களான சிறுகதைகள், நாவல்களை 1947ஆம் ஆண்டு கையெழுத்துப் பிரதியாக்கியுள்ளார். மேலும் பத்திரிகைகளில் ஆலயங்கள் பற்றி 1980 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். 2005 ஆம் ஆண்டு சாக்கோட்டை பங்குத் தந்தையால் வெளியீடு செய்யப்பட்ட அரும்பு என்னும் இறுவெட்டில் அடங்கிய 10 பாடல்களில் 03 பாடல்கள் இவருடையவை. இவர் 2012.01.28 இல் பருவ கலாச்சாரப் பேரவையால் கலைப்பரிதி விருதைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 37
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 31