ஆளுமை:தியாகராசா, பொன்னையா

From நூலகம்
Name தியாகராசா
Pages பொன்னையா
Pages பொன்னம்மா
Birth 1939.05.26
Place வேலணை
Category சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராஜா, பொன்னையா (1939.05.26 - ) வேலணை, தவிடுதின்னியைச் சேர்ந்த சமூக சேவையாளர், எழுத்தாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி, மேடைப்பேச்சாளன், நாடக நடிகன், பத்திரிகை எழுத்தாளன், கவிஞர். இவரது தந்தை பொன்னையா; தாய் பொன்னம்மா. இவர் ஆரம்பக்கல்வியை வங்களாவடி சரஸ்வதி பாடசாலையிலும் வேலணை கிழக்கு கலவன் பாடசாலையிலும் (தற்போது வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்) வேலணை மேற்கு மத்திய கல்லூரியிலும் பயின்றார்.

இவர் 1981 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வெளிநாடு சென்று அங்கும் மக்கள் பணி செய்துள்ளார். இவர் டெனீஸ் தமிழ் தோழமை ஒன்றியம்- டென்மார்க், பாராஞ் தமிழர் அமைப்பு- பாரிஸ், உலகத் தமிழர் பேரமைப்பு- தமிழகம், உலகத் தமிழ் எழுத்தாளர் மன்றம்- தமிழகம், டென்மார்க் தமிழ் எழுத்தாளர் பேரவை, சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்- ஜேர்மனி, உலகத் தமிழர் பண்பாட்டுக் கழகம்- மலேசியா போன்ற அமைப்புக்களில் உறுப்பினராகவும் நிர்வாகியாகவும் இருந்து தமிழ்ப்பணி செய்து வருகின்றார். தனது தாய்மண்ணின் ஆவணத்திரட்டாக அருளமுதம் என்னும் நூலை வெளியீடு செய்துள்ளதோடு பல கவிதை நூல்களையும் சமய நூல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 532A-532B