ஆளுமை:தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம்
From நூலகம்
Name | தாமோதரம்பிள்ளை |
Pages | நாகலிங்கம் |
Birth | 1937.02.11 |
Place | ஊர்காவற்துறை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாமோதரம்பிள்ளை, நாகலிங்கம் (1937.02.11 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். தரம் 05 வரை கல்வி கற்ற இவர் நாட்டுக்கூத்துத் துறையில் ஆர்வம் கொண்டு 45 வருடங்களிற்கு மேலாகக் கலைச் சேவையாற்றியுள்ளார்.
இவர் அரிச்சந்திர மயான காண்டம், இராஜராஜ சோழன், காத்தவராயன், அதியரசன், பண்டார வன்னியன், ஞான சவுந்தரி ஆகிய கூத்துகளில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளதுடன் பல கலைஞர்களைக் கலையுலகிற்குப் பிரசவித்த பெருமை உடையவர்.
இவரது கலைச் சேவைக்காக 2002 ஆம் ஆண்டு கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி, 2003 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை கலாச்சார சபையினால் கலைச்சுடர், தம்பாட்டி காந்திஜி நாடக மன்றத்தினால் ஆடற் கலைஞன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
Resources
- நூலக எண்: 15444 பக்கங்கள் 180