ஆளுமை:தர்மினி, றஜீபன்

From நூலகம்
Name தர்மினி
Pages கருணாகரன்
Pages புவனேஸ்வரி
Birth 1979.07.07
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தர்மினி, றஜீபன் (1979.07.05) யாழ்ப்பாணம், நல்லூரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை கருணாகரன்.; தாய் புவனேஸ்வரி. ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் ஸ்ரேன்லி கல்லூரி, மட்டக்களப்பு விபுலானந்தா கல்லூரி ஆகியவற்றிலும் உயர்நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரேன்லி கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைமாணிப்பட்டம், காமராஜர் பல்கலைக்கழக சமூகவியல் முதுகலைமாணிப்பட்டம், கொழும்புப்பல்கலைக்கழக மனித உரிமைகள் கற்கை டிப்ளோமா, அயர்லண்ட் பல்கலைக்கழக உளவியல் டிப்ளோமா என்பவற்றை கற்று நிறைவுசெய்துள்ளார். 1993ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். கவிதை, கட்டுரை, நாடகப் பிரதியாக்கம், நெறியாள்கை, நடிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பாளர், விவாதியென பன்முகத் திறமைகளைக்கொண்டுள்ளார் தர்மினி றஜீபன். இவரின் ஆக்கங்கள் தினமுரசு, உதயன், வலம்புரி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய நாளிதழ்களிலும் மாற்றம், காலச்சுவடு, தாயகம் ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. சக்தி, டான் ரிவி, யாழ் எவ்.எம், ஐ.பி.சி போன்றவற்றிலும் நிகழ்ச்சி செய்துள்ளார். 1000 கவிஞர்களின் கவிதை நூலிலும் எழுத்தாளரின் கவிதை இடம்பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம், பழமை புதுமை நோக்கு, சமூதாய பார்வை, பெண் சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றை தன் கவிதையின் ஊடாக வெளிக் கொண்டுவந்துள்ளார். அத்துடன் இவர் உதயத்தைத்தேடி கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

தேசிய இளைஞர் சேவை மன்றம் 2000ஆம் ஆண்டு நடத்திய அறிவிப்பாளர் போட்டியில் இரண்டாம் இடம்.

அரச உத்தியோத்தர்களுக்கு இடையிலான குறுநாடகப் போட்டியில் இவரின் ”ஒரு நதி அழுகிறது” என்னும் குறுநாடகம் ஐந்து விருதுகளை பெற்றது.

2016ஆம் ஆண்டு சிறந்த கவிதைக்கு தேசிய விருது கிடைத்து.

2017ஆம் ஆண்டு அன்பால் இணைந்த உறவுகளுக்கு நாடகத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது.

2018ஆம் ஆண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற நாடகத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது.

2017ஆம் ஆண்டு யாழ் இந்திய துணைத்தூதரகத்தினால் சிறந்த தொகுப்பாளருக்கான விருது.