ஆளுமை:தர்மகுலசிங்கம், சி.

From நூலகம்
Name தர்மகுலசிங்கம்
Birth 1947.09.13
Place அல்வாய்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தர்மகுலசிங்கம், சி. (1947.09.13 - ) யாழ்ப்பாணம், அல்வாய், திக்கத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். இவர் திக்கவயல் சி. தர்மகுலசிங்கம், திக்கவயல் சி. தர்மு, அம்பலம், அந்திரசித்து, ஒப்பிலாமணி, திக்கபக்தன், பாணபத்திரன் ஆகிய புனைபெயர்களில் நகைச்சுவையாக்கங்கள், தத்துவக்கட்டுரைகள், வரலாற்றுக்கட்டுரைகள், நாட்டுப்புறப்பாடல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை எழுதி, மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அத்துடன் வீரகேசரி, ஈழமுரசு, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும் சுவைதிரள், கவிதேசம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியதுடன் இலக்கியச்சுடர் பட்டம் பெற்றவர்.


Resources

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 68-74


வெளி இணைப்புக்கள்