ஆளுமை:தருமலிங்கம், பெரியதம்பிப்பிள்ளை

From நூலகம்
Name தருமலிங்கம்
Pages பெரியதம்பிப்பிள்ளை
Pages நல்லம்மா
Birth 1930.04.19
Pages 1994.04.04
Place மட்டக்களப்பு, குருக்கள் மடம்
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தருமலிங்கம், பெரியதம்பிப்பிள்ளை (1930.04.19 - 1994.04.04) மட்டக்களப்பு, குருக்கள்மடத்தைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை; தாய் நல்லம்மா. இவர் மண்டூர் இராம கிருஷ்ண சங்கப் பாடசாலை, மட்டக்களப்பு தூய மிக்கேல் கலாசாலை, பேராதனைக் கூட்டுறவுக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவர் மட்டக்களப்பு களுதாவளை மெதடிஸ்த மிசன் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கூட்டுறவுத் தலைமைப் பரிசோதகராகவும் பணியாற்றியுள்ளார். இவரது கட்டுரைகள், கவிதைகள் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 157