ஆளுமை:தருமரெத்தினம், கதிரேசு

From நூலகம்
Name தருமரெத்தினம்
Pages கதிரேசு
Pages கண்ணம்மை
Birth 1944.10.06
Place மட்டக்களப்பு, தேற்றாத்தீவு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தருமரெத்தினம், கதிரேசு (1944.10.06 - ) மட்டக்களப்பு, தேற்றாத்தீவினைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை கதிரேசு; இவரது தாய் கண்ணம்மை. இவர் தேற்றாத்தீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்று, இலங்கைப் போக்குவரத்து சபையில் பரிசோதகராகப் பணியாற்றினார். தேனூரான் என்னும் புனைபெயர் கொண்டவர்.

இவர் அகலிகை, சாவித்திரி சுயம்வரம், நள தமயந்தி, ஜானகி கல்யாணம், கருணை கொடுத்த நாயகி, அரிச்சந்திரன் முதலான புராணந் தழுவிய நாடகங்கள், கூத்துக்களை எழுதி, நெறியாள்கை செய்தவர். காடவித்த வானராசன், கடவுள் கொடுத்த தண்டனை, கண்ணீர்த் துளிகள், காடழித்த மாயவன், குடி கெடுத்த அரசன், சரிந்த இதயம், நீர் வளன், துட்டகைமுனு, ராஜ ராஜன் முதலான சமூக, வரலாறு சார்ந்த கூத்துக்கள், நாடகங்களை நெறியாள்கை செய்தவர்.

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 156