ஆளுமை:தம்பிமுத்து, சின்னராசா

From நூலகம்
Name தம்பிமுத்து
Pages சின்னராசா
Pages கனகேஸ்வரி
Birth 1957-10-10
Pages 2012.07.20
Place கிளிநொச்சி, பரந்தன்
Category அண்ணாவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தம்பிமுத்து, சின்னராசா (1957-10-10 - 2012.07.20) கிளிநொச்சி, பரந்தனை பிறப்பிடமாகக் கொண்ட அண்ணாவி ஆவார். இவரது தந்தை சின்னராசா; தாய் கனகேஸ்வரி.

1968 இல் பாலசூரன் நாடகத்தினை பழக்கி மேடையேற்றினர். இவர் தனது மேடையேற்றங்களில் அவரது மகனான பத்திநாதன் அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரங்களை வழங்க மாட்டார். அதாவது அரசன், சேனாதிபதி போன்ற முக்கிய பாத்திரங்களை வழங்கிப் பெருமை சேர்த்து கொள்வதை விட படிப்படியான பாத்திர வளர்ச்சியில் நகர்த்தி சென்றுள்ளமை அறியமுடிகின்றது. உதாரணமாக 1974 ஆம் ஆண்டு யாகப்பர் திருவிழாவிற்காக நெறியாள்கை செய்த வாழைப்பூ நாடகத்தில் இடையன் பாத்திரத்தினை வழங்கியுள்ளார். பின்னர் 1983 ஆம் ஆண்டு பழக்கிய பாலசூரன் நாடகத்தில் அரசன் பாத்திரம் கொடுத்துள்ளார். 2013 இல் கனகாம்பிகை குளம் அம்மன் கோவில், நித்தியாபற்றி பிள்ளையார் கோவில், நெல்லிப்பள்ளம் பிள்ளையார், சீராவில் பிள்ளையார், சோறன்பற்று அம்மன், கைதடி இடுக்குத்தோட்டம் போன்ற ஆலயங்களில் திருவிழா காலங்களில் கூத்து போடுவதனை வழக்கமாக கொண்டவர்.

இவரது கலைச்சேவையை பாராட்டி கரைச்சி பிரதேச கலாச்சார பேரவையினால் 2011 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதான கரைஎழில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2012.07.20 அன்று எதிர்பாராத விதமாக இறைவனடி சேர்ந்தார்.