ஆளுமை:தம்பித்துரை, அம்பலவாணர்

From நூலகம்
Name தம்பித்துரை
Pages அம்பலவாணர்
Birth 1928.03.30
Place சுன்னாகம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பித்துரை, அம்பலவாணர் (1928.03.30 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அம்பலவாணர். நாடகங்கள் எழுதுதல், பயிற்றுவித்தல், நெறியாள்கை செய்தல், நடித்தல், சிறுகதை எழுதுதல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வந்த இவர், தான் கற்பித்த பாடசாலைகளில் இடம்பெறும் பல நிகழ்ச்சிகளுக்கு நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியுள்ளார்.

இவர் உடற்கல்வி ஆசிரியராவதுடன் சம்பளம் வரட்டும், இறுதிப் பரிசு, மண் சுமந்த மதுரை, நாயகன், மந்தரையின் சூழ்ச்சி, நீதிக்கொரு சோதனை முதலான நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளதோடு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவருடைய சிறுகதைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

இவருக்கு 2008 ஆம் ஆண்டில் வலிகாமம் தெற்குக் கலாச்சாரப் பேரவை ஞானஏந்தல் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சு. வித்தியானந்தனால் சிறந்த நடிகர் எனப் பாராட்டப்பட்டதுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 178