ஆளுமை:தட்சணாமூர்த்தி, விசுவலிங்கம்

From நூலகம்
Name தட்சணாமூர்த்தி
Pages விசுவலிங்கம்
Pages இரத்தினம்
Birth 1933.08.26
Pages 1975.05.13
Place அளவெட்டி
Category தவில் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தட்சணாமூர்த்தி, விசுவலிங்கம் (1933.08.26-1975.05.13) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை விசுவலிங்கம்; இவரது தாய் இரத்தினம். இவர் தனது எட்டு வயதிலிருந்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.

இவர் 1959 ஆம் ஆண்டு சென்னைத் தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பெற்ற இசைவிழாவில் காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளையின் நாதஸ்வரத்திற்குத் தவில்மேதை நீடாமங்கல சண்முக வடிவேலுடன் இணைந்து தவில் வாசித்துப் பாராட்டுப்பெற்றார். இவர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தவிற் கச்சேரி செய்தார். இவர் கற்பனைச்சுரங்கம், கரகவேக கேசரி, தவில் வாத்திய ஏகச் சக்கிராதிபதி, லயஞான குபேர பூபதி போன்ற பல பட்டங்களைப் பெற்றார்.

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 546-547
  • நூலக எண்: 7474 பக்கங்கள் 82-85
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 96