ஆளுமை:தங்கராஜபிள்ளை, நாராயணசாமிப்பிள்ளை
From நூலகம்
Name | தங்கராஜபிள்ளை |
Pages | நாராயணசாமிப்பிள்ளை |
Pages | ஜானகி அம்மாள் |
Birth | 1916 |
Pages | 1979.01.19 |
Place | வண்ணார்பண்ணை |
Category | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தங்கராஜபிள்ளை, நாராயணசாமிப்பிள்ளை (1916 - 1979.01.19) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை நாராயணசாமிப்பிள்ளை; தாய் ஜானகி அம்மாள். இவர் தனது மிருதங்கக் கல்வியைப் புத்துவாட்டி இரத்தினம், காரைக்கால் கோபாலசாமி, பாலு ஆகியோரிடம் முறைப்படி பயின்றார்.
இவர் 1948 ஆம் ஆண்டு தனது மிருதங்க இசைக் கச்சேரிகளை ஆரம்பித்தார். இவர் சி. எஸ். மணிபாகவதர், கும்பகோணம் வீ. பி. ராஜேஸ்வரி, மைதிலி ஆகியோருக்கு 1954 ஆம் ஆண்டு தொடக்கம் 1956 ஆம் ஆண்டு வரை ஈழத்தின் பல பாகங்களிலும் மிருதங்கத்தை வாசித்துப் பாராட்டுப் பெற்றார். இவருடைய வாசிப்பில் வலந்தரை தொப்பி சமப்படும் வகையிலும் பரண் சொற்கள் சுருதி சுத்தமானதாகவும் அதிமேற்காலமாகவும் அமையும்.
Resources
- நூலக எண்: 7474 பக்கங்கள் 49-51