ஆளுமை:டேவிட் ராஜு

From நூலகம்
Name டேவிட் ராஜு
Birth 1935.08.07
Place தீவகம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டேவிட் ராஜு (1935.08.07 - ) தீவகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கொழும்பு அலெக்ஸாண்டர் கல்லூரியில் கல்வி பயின்று எஸ்.எஸ்.சியில் திறமைச் சித்தி பெற்றுப் பல்கலைக்கழகத் தேர்விலும் வெற்றியீட்டிய போதும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லாமல் மாறாக வீரகேசரிக்குள் நுழைந்தார். செய்திப் பிரிவில் சேர்ந்து துணைச் செய்தி ஆசிரியர், செய்தி நிருபர் ஆகிய பதவிகளை வகித்துப் பின் பிரதம துணை ஆசிரியராக நியமனம் பெற்றார். செய்திகளைச் சேகரித்துத் தரம் பிரித்தல், பொருத்தமான தலைப்பிடுதல் போன்ற பத்திரிகைத் துறைக்கான அம்சங்களில் கைவரப் பெற்றவர்.

1984 ஆம் ஆண்டு வீரகேசரியை விட்டு விலகிய இவர், வெளிநாடு சென்று சவூதி அரேபியாவின் றியாட் விமான நிலையத்திலும் சவுதி அரச விமான நிலையத்திலும் ஊடக்த்துறை மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். 17 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய இவர், தினக்குரல் பத்திரிகையின் ஊடக ஆலோசகராகப் பதவி வகித்தார்.

Resources

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 22-25