ஆளுமை:டேவிட் ஜெயரட்ணம், அம்பலவாணர்

From நூலகம்
Name டேவிட் ஜெயரட்ணம்
Pages அம்பலவாணர்
Pages அன்னம்மா
Birth 1928.02.28
Pages 1997.10.10
Place புங்குடுதீவு
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருட்திரு பேராயர் டேவிட் ஜெயரட்ணம், அம்பலவாணர் (1928.02.28- 1997.10.10) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமயப் பெரியார். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் அன்னம்மா. இவர் ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பரியோவன் கல்லூரியிலும் கற்றுப் பின் மேற்படிப்பை இந்தியா சேரம்பூர் பல்கலைக்கழகத்திலும் பின்னர் இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

பல இடங்களில் போதகராக இறைபணி புரிந்த இவர், 1971 இல் தென் இந்தியத் திருச்சபையின் இலங்கைப் பேராயராகப் பதவி ஏற்று 1993 வரை 22 வருடங்கள் மிகவும் சிறப்பாகப் பணி புரிந்தார். இவர் சமூகத்தில் ஏழை எளியவர்கள், அங்கவீனர்கள், உற்றார், உறவினரை இழந்தவர்களின் துயரங்களைத் துடைக்கும் பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினார். அவற்றுள் சிறுவர் இல்லங்கள், பகல் பராமரிப்பு நிலையங்கள், முதியோர் இல்லங்கள் போன்றன குறிப்பிடத்தக்கன. அத்தோடு தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட இனமக்களாக வாழ்ந்து வருகின்றார்கள் என்ற உண்மையையும் அவர்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் மிகத் துணிச்சலுடன் முழு உலகிற்கும் எடுத்துச் சொன்ன கர்மவீரர் இவராவார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 136

வெளி இணைப்புக்கள்