ஆளுமை:ஞானசீலன், அருளானந்தம்

From நூலகம்
Name ஞானசீலன்
Pages அருளானந்தம்
Pages அக்கினேசம்மா
Birth 1960.01.01
Place குமுழமுனை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளானந்தம் ஞானசீலன் குமுழமுனையில் பிறந்தார்.(1960). ஆரம்பக்கல்வியை தரம் மூன்று வரை குமுழமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், தரம் பத்து வரை பூனகரி மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். தனது 12 வயதில் மாணவர் சங்கத்தில் "ஏழையின் கண்ணீர்” எனும் நாடகத்தை முதன்முதலில் நடித்தார். தொடர்ந்து ராகசூரியர் எனும் கதாசிரியருடன் இணைந்து “உன் கண்ணில் நீர் வடிந்தால் “ எனும் நாடகத்தினை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றியுள்ளார். “எல்லைக்கற்கள்" எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். “தூண்டில் மீன்", “எல்லைக்கற்கள்", “தாயின் ஆணை", “நிகழ்வுகளின் நிஜங்கள்", “அவசரகார அப்பு", “சிங்கப்பூர் சிங்காரி", போன்ற நாடகங்களை நடித்துள்ளார். தற்போது டொன்.பொஸ்கோவில் சமூக விழப்புணர்வு நாடகங்களை நடித்து வருகின்றார். நகைச்சுவை நாடகங்களை உடனடியாக இயற்றி நடிக்கக் கூடிய ஆற்றல் இவரது சிறப்பாகும். கிறிஸ்த்தவ வரலாற்று நாடகங்களான அந்தோனியார், செபஸ்தியார் ஆகிய நாடகங்களையும் நடித்துப் பெருமை பெற்றுள்ளார்.

கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும், கமக்கார அமைப்பின் உபதலைவராகவும், சனகமூக நிலையத்தின் தலைவராகவும், கோவில் பணி செயலாளராகவும், ப.நோ.கூ.சங்கத்தின் கிளைத் தலைவராகவும் பதவிகளை வகித்துள்ளார்.