ஆளுமை:ஜெய்சங்கர், சிவஞானம்

From நூலகம்
Name ஜெய்சங்கர்
Pages சிவஞானம்
Pages மகாயோகேஸ்வரி
Birth 1965. 12 .29
Pages -
Place கோண்டாவில், யாழ்ப்பாணம்
Category அரங்கப் பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



சிவஞானம் ஜெயசங்கர் (1965.12.29) இவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை சிவஞானம், தாய் மாகாயோகேஸ்வரி. இவரது மனைவி கமலா வாசுகி. இவருக்கு மூத்த சகோதரிகள் மூவரும், மூத்த சகோதரன் ஒருவரும் உள்ளனர். கடந்த 1995 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பில் வசித்து வருகிறார். இவர் தனது பாடசாலைக் கல்வியினை கோண்டாவில் இந்து மகா வித்தியாலம், கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் யாழ் புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றில் கற்றுள்ளார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பிரிவில் சிறப்புப் பட்டம் பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுதேசிய சமுதாய அரங்காக கூத்தின் மீளுருவாக்கம் என்ற தலைப்பில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கலாநிதிப் பட்டமும் பெற்று இப்பொழுது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரங்கப்பேராசிரியராகப் பணிபுரிகிறார். ‘மூன்றாவது கண்’ என்ற இதழை வெளியிடும் இவர் மட்டக்களப்பில் இயங்கும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவின் இணை இணைப்பாளராகச் சேவையாற்றுகிறார். அவ்வமைப்பினரின் மூன்றாவது கண் இதழின் இணையாசிரியருமாவார். இவ்வமைப்புடன் இணைந்து பலவிதமான சமூகச் செயற்பாடுகள், பட்டறைகள், கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகள், சிறுவர் கூத்தரங்க ஆற்றுகைகள் மற்றும் உள்ளூர் அறிவுத்திறன் சார்ந்த செயற்பாடுகள் போன்ற அரங்க அளிக்கைகள், கட்டுரை ஆக்கங்கள், நூல் வெளியீடுகள் எனப் பலவிதமான சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றார்.