ஆளுமை:ஜெயராமன், அம்பலவாணர்

From நூலகம்
Name ஜெயராமன்
Pages அம்பலவாணர்
Birth 1959.08.29
Place வண்ணார்பண்ணை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராமன், அம்பலவாணர் (1959.08.29 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் யாழ்ப்பாணம் கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். தனது ஒன்பதாவது வயதிலிருந்து பிரபல வயலின் வித்துவான் எஸ். சர்வேஸ்வர சர்மாவிடம் முறைப்படி வயலின் இசையைக் கற்றுக்கொண்டார். வட இலங்கை சங்கீத சபைப் பாடத்திட்டத்திற்கு அமைய ஆசிரியர் தரம் வரை வயலின் இசையைப் பயின்றுள்ளார். இவரது முதலாவது தனி வயலின் இசைக் கச்சேரி வண்ணை ஶ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் பன்னிரண்டு வயதில் அரங்கேறியது.

இவர் உ. இராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து 1981 - 1983 வரை இலங்கையின் பல்வேறு இடங்களிலும் வயலின் வாசித்துள்ளதோடு ஆலயங்கள், கலைவிழாக்கள், இசை நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், நடன நிகழ்வுகள், நாடக நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளில் வயலின் இசையைப் பக்க வாத்தியமாக இசைத்து வருகின்றார்.

இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் அமைச்சு 2003 ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாநாட்டு நிகழ்வின்போது இவரைப் பாராட்டிச் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளது. இவருக்கு இசைஞானசுரபி என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 132